பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

புற்களில் மீது விழும் பனித்துளி எவ்வாறு நிலையில்லாததோ, அதுபோலவே மனித வாழ்க்கையும் நிலையற்றது.    
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* புற்களில் மீது விழும் பனித்துளி எவ்வாறு நிலையில்லாததோ, அதுபோலவே மனித வாழ்க்கையும் நிலையற்றது.    
- மகாபாரதம்

* ஞானமார்க்கத்தில், புலன்கள் என்னும் வாயில்களை மூடி வைக்க வேண்டும்.  ஆனால் பக்திமார்க்கத்தில் ஒவ்வொரு புலனையும் பகவானின் வழிக்குத் திரும்பிவிட வேண்டும். இதுதான் முறை.

* பக்திமார்க்கத்தில் செல்வம் முக்கியமன்று; உடலுக்கும் பக்திக்கும் செல்வத்தை முக்கியமாக நினைக்கத் தொடங்கிய நாளிலிருந்து பக்தியே சீர்குலைந்து போய்விட்டது.

* தொண்டு செய்வதற்குப் பணம் முக்கியமன்று; மனம்தான் முக்கியம். தொண்டு என்பதற்கு, வழிபடுவதற்கு உரிய ஸ்ரீ கிருஷ்ணனிடம் மனதைப் பூரணமாகச் செலுத்துவது என்பதே பொருள்.

* சேவை மனதுடன் சம்பந்தப்பட்ட தொண்டு மனதிலிருந்துதான் ஆரம்பமாகிறது.

* மனம் நுட்பமானது. அதனால் அது ஒரே நேரத்தில் உலகத்துடனும், பகவானுடனும் தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது. நாமே மனதை வேண்டிக்கொண்டால், பகவானுடன் தொடர்பு வைத்துக்கொள்வதற்கு அது எளிதில் இணங்கிவிடும். வேறு யாராவது போதனை செய்தால் அது பலிக்காது. நீங்களே முறைப்படி மனதை வேண்டிக்கொண்டால், அது எளிதில் சரியான வழிக்கு வந்துவிடும்.
- ஸ்ரீமத் பாகவத ரகசியம்   

* பரமாத்மா மனித உடலாகிய கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்.  அவரை சமத்துவ மனதால்தான் அறிய முடியும்.
- யோகசாரம்

* கோபம் வந்துவிட்டால், "மனிதனுக்கு என்ன பேசலாம்?, என்ன பேசக் கூடாது?' என்பதே தெரிவதில்லை. கோபம் கொண்டவன் எதையும் செய்யத் துணிவான். அவன் வாயிலிருந்து என்னதான் வரும் என்பது ஒன்றும் நிச்சயமில்லை.    
- வால்மீகி ராமாயணம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com