நீங்களே தேவனுடைய ஆலயம்!

குட்டி பையன் சுந்தர் தன் அம்மாவோடு பல்பொருள் அங்காடிக்கு போனான். அவன் அம்மா டிராலியை தள்ளிக்கொண்டே பொருள்களை எடுத்துக் கொண்டிருந்தார். சுந்தர் விளையாடிக் கொண்டே ஸ்டோரின்
நீங்களே தேவனுடைய ஆலயம்!

குட்டி பையன் சுந்தர் தன் அம்மாவோடு பல்பொருள் அங்காடிக்கு போனான். அவன் அம்மா டிராலியை தள்ளிக்கொண்டே பொருள்களை எடுத்துக் கொண்டிருந்தார். சுந்தர் விளையாடிக் கொண்டே ஸ்டோரின் வாசற்படிக்கு வந்துவிட்டான். சாலையை பார்த்தான். அழகிய வண்ண வண்ண கார்கள் ஓடுவதைப் பார்த்துக் கொண்டே கைகளைத் தட்டி வெள்ளை கார், சிவப்பு கார் என மகிழ்ச்சியுடன் சத்தமிட்டுக் கொண்டே சாலையின் புறமாக நடந்து இரு திருப்பங்களைக் கடந்து விட்டான். அப்போதுதான், நான் அம்மாவை விட்டு தூரமாக வந்துவிட்டதை அறிந்து பல்பொருள் அங்காடிக்கு போக வழி தெரியாமல் "ஓ' என அழ ஆரம்பித்துவிட்டான்.
 இவன் அழுவதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் வந்து விசாரிக்க ஆரம்பித்தனர். "உன் அம்மா பெயர் என்ன?' என்று கேட்டதற்கு, "மம்மா' என்றான். அப்பா பெயர் கேட்டதற்கு "பப்பா' என்றான். "உன் பெயர் என்ன என்று கேட்க, "பேபி' என்று சொல்லி மிகவும் அழஆரம்பித்து விட்டான்.
 டிராஃபிக் போலிஸ்காரர் வந்து அவனை பெற்றோரிடம் சேர்க்க முயற்சித்தார். ஆனால், விவரம் தெரியவில்லை. போலிஸ்காரர் தம் மோட்டார்சைக்கிளில் முன்புறம் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டே தேட ஆரம்பித்தார். சாலை வளைவு வந்ததும் குட்டி பையன் சுந்தர், ""ரைட்... ரைட்'' என்றான். போலிஸ்காரர் ரைட்டில் வளைத்தார். இப்படியே லெஃப்ட், ரைட் என வளைவுகளை கடந்தபோது கடைசியாக மோட்டார் சைக்கிள் ஓர் ஆலயத்துக்கு முன் நின்றது.
 சுந்தர் தன் அப்பா அம்மாவுடன் காரில் ஞாயிறுதோறும் செல்லும் புனிதமேரி ஆலயம்தான் அது. அங்கு பாதிரியார், சுந்தரைப் பார்த்தவுடன், "சுந்தர் எங்கேடா போனே, உன் அம்மா உன்னைக் காணாமல் தேடி ஆலயத்துக்கு வந்து நீ கிடைக்க வேண்டும் என்று அழுது கொண்டிருந்தார்கள்'' எனக் கூறி அவன் அம்மாவிடம் அவனைச் சேர்த்தார்.
 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆலயத்துக்கு வரும் சுந்தருக்கு தன் பெயர் தெரியாவிட்டாலும் தமது ஆலயம் போகும் வழி தெரிந்திருந்தது. அதனால் தன் ஆலயத்தையும் பாதிரியாரையும் தன் அம்மாவையும் கிடைக்கப் பெற்றான்.
 ஆலயம் கடவுளை தொழும் இடம். ஆலயத்தில் பாட்டும் கர்த்தரின் வார்த்தையும் எல்லா மக்களின் நட்பும் உண்டு. ஆலயம் வருவோர் கடவுளின் ஆசி பெற்றுக் கொள்கின்றனர்.
 இயேசு தம் உடலை ஆலயமாக உருவகப் படுத்துகிறார். எருசலேம் ஆலயத்தைப் பார்த்து, "இவ்வாலயத்தை இடித்துப் போடுங்கள்; மூன்று நாளில் கட்டுவேன்' எனக் கூறி தான் சிலுவையின் பாடுகளை குறித்தும் சிலுவையில் அறையப் படுவதையும் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவதையும் கூறினார்.
 ஆண்டவரின் அப்போஸ்தலர் பவுல் நம் உடம்பை, உள்ளத்தை ஆன்மாவை கடவுளின் ஆலயம் என்கிறார். " நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும் தேவனுடைய ஆவி உங்களில் வசமாயிருக்கிறதென்றும் அறியாதிருக்கிறீர்களா?'' (1 கொரிந்தியர் 3:16) நாம் ஆலயம்! புனிதமும் பரிசுத்தமும் நீண்ட உயர்ந்ததும் எல்லோரும் தொழுதுக் கொள்ளும் இனிய மகிழ்வு தரும் மனிதராவோம். புனிதம் காப்போம். மகிழ்வாய் வாழ்வோம்.
 - தே. பால் பிரேம் குமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com