நிகழ்வுகள்

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் சுவாமிக்கு புனுகு சாம்பிராணி தைலாபிஷேக கார்த்திகை தீப உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு

புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம்
 சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் சுவாமிக்கு புனுகு சாம்பிராணி தைலாபிஷேக கார்த்திகை தீப உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு நவம்பர் 22 -ஆம் தேதி (வியாழன்) மாலை மூலவர் கவசம் திறக்கப்பட்டு புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் மற்றும் மஹா அபிஷேகமும் தொடர்ந்து இரவு தியாகராஜ பெருமான் மாடவீதி உற்சவமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நவம்பர் 23, 24 இரு தேதிகளில் மூலவரை கவசமின்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். நவம்பர் 24 இரவு 9 மணிக்கு அர்த்த சாமபூஜைக்குப்பிறகு மீண்டும் கவசம் அணிவிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறையே இந்த மூன்று தினங்களில் மட்டுமே கவசமின்றி சுவாமியை முழுமையாக தரிசிக்கும் வாய்ப்பை பெறலாம்.
 தொடர்புக்கு: 044 2573 3703.
 ஸ்ரீ முருகன், வள்ளி, தேவசேனா திருக்கல்யாணம்
 சென்னை, குரோம்பேட்டை, கிருஷ்ணா நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீராம பக்த சமாஜ மண்டபத்தில் ஸ்ரீமுருகன், வள்ளி, தேவசேனா திருக்கல்யாணம் பஜனை பந்ததியில் நவம்பர் 18 -ஆம் தேதியன்று வி.கோபாலசுந்தரம் பாகவதர் கோஷ்டியினர் நிகழ்த்துகின்றனர். இதனையொட்டி திவ்யநாமம், டோலோத்ஸவம் நவம்பர் 17- ஆம் தேதி நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 98412 84637 / 98409 70419.
 ஸ்ரீயாக்ஞவல்கிய ஜெயந்தி மகோத்ஸவம்
 சென்னை பழைய பல்லாவரம் பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீயாக்ஞவல்க்ய சபாமண்டபத்தில் ஸ்ரீ யோகீஸ்வர யாக்ஞவல்க்ய பரமாச்சார்யாளின் ஜெயந்தி மகோத்ஸவம் நவம்பர் 23 முதல் 25 வரை நடைபெறுகின்றது. இதனையொட்டி சுக்லயஜீர் வேதபாராயணம், விசேஷ ஹோமங்கள், நாம சங்கீர்த்தனம், குத்து விளக்கு பூஜை, ஆஞ்சநேய உத்ஸவம் போன்ற வைபவங்கள் நடைபெறும். முன்னதாக நவம்பர் 20 -ஆம் தேதி கடஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
 தொடர்புக்கு : 98410 22284 / 98400 51587.
 பாலாலயம்
 தஞ்சை மாவட்டம், மெலட்டூர் கிராமத்தில் உள்ள பழைமையான அருள்மிகு சித்தி புத்தி சமேத ஸ்ரீதட்சிணாமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற வேண்டி பாலாலய வைபவம் நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 098440 96444 / 99943 67113.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com