விமான நிலையத்தை காவல் காக்கும் ரோபோக்கள்!

உலகிலேயே முதன் முறையாக சீனாவின் ஷென்சென் சர்வதேச விமான நிலையத்தில் காவல் பணியில் ரோபோக்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையத்தை காவல் காக்கும் ரோபோக்கள்!

சீனாவில் முதன் முறையாக ஷென்சென் சர்வதேச விமான நிலையத்தில் காவல் பணியில் ரோபோக்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் உள்ள பரபரப்பான விமான நிலையங்களில்  ஷென்சென் சர்வதேச விமான நிலையமும் ஒன்று. இங்குள்ள முனையம் ஒன்றில் பாதுகாப்பு பணியில் 'அன்போட்' எனப்படும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஓவல் வடிவத்தில்காணபப்டும் இந்த ரோபோக்கள் பார்ப்பதற்கு, புகழ் பெற்ற 'ஸ்டார் வார்ஸ்' ஆங்கில திரைப்படத்தில் இடம் பெற்ற, 'R2D2' என்ற ரோபோவைப் போலவே தோற்றம் அளிக்கின்றன. இவற்றின் முகத்தில் இருக்கும் ஒளிரும் டிஜிட்டல் திரையில், மிகுதிறன் வாய்ந்த கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த முனையத்தின் வழியே பயணிப்போரின் புகைப்படங்கள் எடுக்கப்படும்.

மணிக்கு 18 கி.மீ தூரத்தை கடக்க வல்ல வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவின் மூலம் வருங்காலத்தில் மேலும் பல விஷயங்களை செய்ய வைக்க இயலும். உதாரணமாக மேலும் ஒரு இயந்திரக் கரம் பொருத்தப்பட்டு அதன் மூலம், மின்சாரம் பாய்ச்சும் வசதியை ஏற்படுத்தலாம்.ஆயுதங்கள், வெடி பொருள்கள் மற்றும் போதைமருந்துகளை கண்டுபிடிக்கவும் இவ்வகை ரோபோட்டுக்களை  பயன்படுத்த இயலும்.  

இந்த ரோபோட்டுக்களை சீனாவின்  சங்ஷா பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com