ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 140 பேர் பலி: நரேந்திர மோடி கண்டனம்

ஆப்கானிஸ்தானில், ராணுவ வீரர்கள் முகாம் மீது தலிபான்கள் பயங்கரவாதிகள் நேற்று மாலை நிகழ்த்திய கொடூர தாக்குதலில், 140க்கும் அதிகமானோர்
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 140 பேர் பலி: நரேந்திர மோடி கண்டனம்

ஆப்கானிஸ்தானில், ராணுவ வீரர்கள் முகாம் மீது தலிபான்கள் பயங்கரவாதிகள் நேற்று மாலை நிகழ்த்திய கொடூர தாக்குதலில், 140க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நாட்டில் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆப்கானில் உள்ள மசர் இ ஷெரீஃப் என்ற நகரில் ஆப்கான் வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதனை ரகசியமாக அறிந்த தலிபான் பயங்ரவாதிகள், ஆப்கான் ராணுவ வீரர்கள் போல் உடை அணிந்துக்கொண்டு முகாம்களுக்குள் அதிரடியாக நுழைந்து கொலை வெறி தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

சுமார் 7 மணி நேரம் நிகழ்ந்த இந்த தாக்குதலில் ராணுவ வீரர்களும் எதிர்த்தாக்குதலை நடத்தியுள்ளனர். எனினும், இத்தாக்குதலில் ஆப்கான் ராணுவத்தை சேர்ந்த 140 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தலிபான் பயங்ரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை உலுக்கியுள்ள இத்தாக்குதலில் பல ராணுவ வீரர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடி வருவதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், இதுபற்றி அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் கூறுகையில், ஆப்கன் வீரர்கள் 50 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஆப்கன் பாதுகாப்புப் படையினர் மீது தலிபான்கள் நிகழ்த்தியுள்ள மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்க பதிவில்,

 Strongly condemn the cowardly terror attack in Mazar-i-sharif. Our prayers and condolences to the familes who lost loved ones.
    — Narendra Modi (@narendramodi) April 22, 2017

“ மசார் இ ஷெரீஃப் நகரத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com