எஃகு போன்ற நட்பு கொண்டது சீனா-பாகிஸ்தான் 

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நட்பு எஃகு போன்று வலிமையானது என சீன துணை அதிபர் வாங் யாங், திங்கட்கிழமை தெரிவித்தார். 
எஃகு போன்ற நட்பு கொண்டது சீனா-பாகிஸ்தான் 

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14-ந் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க சீனாவுக்கு அந்நாட்டு அரசு சார்பில் சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து கலந்துகொண்ட சீன துணை அதிபர் வாங் யாங் கூறியதாவது:

பாகிஸ்தான், சீனா சகேதரர்களைப் போன்றது. இதன் நட்பு எஃகு போன்று வலிமையானது. தோள் கொடுப்பான் தோழன் என்பதற்கு இந்த இரு நாடுகளும் தான் சிறந்த உதாரணம். எந்த காலகட்டத்திலும் பாகிஸ்தான் எங்களுடனான உறவில் உறுதுணையாக இருந்துள்ளது. இது இனி வரும் காலங்களிலும் தொடரும். 

கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரம், ஆரோக்கியம், ஊடகம் ஆகியவற்றில் இரு நாடுகள் இடையிலான வர்த்தக புரிந்துணர்வு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி எழுச்சி கண்டுள்ளது.

இரு நாடுகள் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்னும் பல துறைகளில் அதிகம் சாதிக்க வாய்ப்புள்ளது. கூடிய விரைவில் அவற்றிலும் நமது வளர்ச்சி இருக்கும். சீனா மற்றும் பாகிஸ்தான் பொருளாதார ஒப்பந்த கமிட்டி மிகச் சிறப்பாக செயல்படுகிறது. 

இதனால் இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் சீரான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. மேலும், இதன்மூலம் பலதரப்பட்ட முதலீடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் தலைசிறந்த லாபச் சந்தையாக விளங்கும். இந்த பொருளாதார மண்டலத்தின் மூலம் வாடார் துறைமுகம் பாகிஸ்தானில் விரைவில் ஏற்படுத்தப்படும். 

எரிபொருள் மற்றும் எரிசக்தித் துறையில் முதலீடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் இருநாடுகளின் சந்தையிலும் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வேத்துறை, ஊரக மேம்பாட்டுத்துறை, தொழிற்பூங்கா உள்ளிட்டவைகளில் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். இதற்கு தேவையான அனைத்தும் சீன அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படும். 

சீனாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு போக்குவரத்து மேம்படுத்தப்படும். இதனால் 21-ம் நூற்றாண்டில் பொருளாதாரம் மேலும் வலிமை அடையும். இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com