நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 78-ஆக உயர்வு

நேபாளத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்தது.இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

நேபாளத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
நேபாளத்தில் கடந்த நான்கு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. பல ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. திங்கள்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மழை தொடர்பான பேரிடர்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78-ஆக அதிகரித்தது. மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 35 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கனமழை காரணமாக 27 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தின் பெரும்பாலான பகுதி வழியாக ஓடும் ராப்தி நதி பெருக்கெடுத்துள்ளதால் அதன் வழியெங்கும் கரையோரங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சித்வான் பள்ளத்தாக்கில் உள்ள தேசிய பூங்காவின் சௌராஹா பகுதியில் சிக்கித் தவித்த 35 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக
இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com