பாகிஸ்தான்: தகுதி நீக்கத் தீர்ப்பை எதிர்த்து நவாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

பிரதமர் நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
பாகிஸ்தான்: தகுதி நீக்கத் தீர்ப்பை எதிர்த்து நவாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

பிரதமர் நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
பனாமா ஆவணங்கள் கசிவைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு லண்டனில் குடியிருப்புகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பிரதமராக இருந்த நவாஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் புகார்களைக் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர் தனது பிரதமர் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மகனுக்கு சொந்தமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் அவர் ஊதியம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்து முறையிட்டுள்ளார் என்று தெரிகிறது. மூன்று முறையீட்டு மனுக்களை அவர் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்றத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, நீதிபதிகளை அவமதித்ததாக லாகூர் உயர் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீஃப் ராஜிநாமா செய்த லாகூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் அவருடைய மனைவி கல்ஸþம் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லாகூர் இடைத் தேர்தல் செப். 17 நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com