298 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை

கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்பட்டதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்பட்டதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் குடியேறிய 298 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டில் 48 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த 2013-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வந்திருந்த 75 பேருக்கும், 2014-ஆம் ஆண்டில் 76 பேருக்கும் பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்பட்டது.
எனினும், 2015-ஆம் ஆண்டில் 15 இந்தியர்கள் மட்டுமே பாகிஸ்தான் குடியுரிமை பெற்றனர். 2016-ஆம் ஆண்டில் 69 இந்தியர்களுக்கும், நடப்பு ஆண்டின் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 15 இந்தியர்களுக்கும் பாகிஸ்தான் குடியுரிமை கிடைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் "எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்' நாளிதழ் கூறுகையில், "பாகிஸ்தான் குடியுரிமை பெறுவது மிகவும் கடினம் என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், உண்மையில் இந்தியா, வங்கதேசம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளிலிருந்து ஏராளமானோர் இங்கு குடியேறி வசித்து வருகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com