கடலில் பாய்ந்த பேருந்து: 14 பேர் சாவு

ரஷ்யாவில் பேருந்து கடலில் பாய்ந்த விபத்தில் சிக்கி 14 பேர் வெள்ளிக்கிழமை மரணமடைந்தனர்.
கடலில் பாய்ந்த பேருந்து: 14 பேர் சாவு

ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் செல்லும் பேருந்து ப்ளாக் ஸீ எனும் கடலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

தெற்கு ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனத்துக்கு கட்டுமானத் தொழில் செய்யும் ஊழியர்களுடன் பேருந்து வந்தது. அப்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அம்மாகாண ஆளுநர் அறிக்கையில், அப்பேருந்தில் 35 பேர் பயணித்ததாகவும், விபத்தில் இருந்து 20 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், விபத்து நடந்த இடத்தில் இருந்த அவசர மீட்புப் பணியினர், அந்தப் பேருந்தில் 38 பேர் பயணித்ததாகவும், 24 பேர் வரை மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யா போலீஸ் தரப்பில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு தரப்பின் தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மீறப்பட்டுள்ளது தொடர்பாகவும், அந்தப் பேருந்தின் தரம் குறித்தும் விசாரித்து வருவதாக ரஷ்ய போலீஸார் உறுதிபடுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com