ஹார்வே புயல் தாக்கி டெக்ஸாஸ் மாகாணம் சூறை: 2 லட்சம் மக்கள் தவிப்பு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த ஹார்வே புயல் வெள்ளிக்கிழமை தாக்கியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஹார்வே புயல் தாக்கி டெக்ஸாஸ் மாகாணம் சூறை: 2 லட்சம் மக்கள் தவிப்பு

அமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத பெரும் புயல் வெள்ளிக்கிழமை தாக்கியது. மணிக்கு சுமார் 209 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. 

ஹார்வே புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் டெக்ஸாஸ் மாகாணத்தின் துறைமுகப் பகுதியில் கடந்தது. அப்போது அங்கு பல பகுதிகளை துவம்சம் செய்தது. மரம், வீடு, வாகனம் உள்ளிட்டவை கடும் சேதமடைந்தன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

இந்த பாதிப்பில் சிக்கி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி சேதமடைந்தவற்றை சீர்செய்யும் முயற்சியில் அமெரிக்காவின் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.

ஹார்வே புயல் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டனர். இதனால் பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டன. 

இந்நிலையில், உச்சகட்டமான 4-ஆம் நிலையுடன் தாக்கிய ஹார்வே புயல் தற்போது வலுவிழந்து 3-ஆம் நிலைக்கு இறங்கியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், புதன்கிழமை வரை கடும் மழை தொடரும் என்றும் அறிவித்தது.

கடந்த 2001-ம் ஆண்டு தாக்கிய அலிஸன் புயல் மற்றும் 2004-ம் ஆண்டு தாக்கிய சார்லி புயலுக்கு பிறகு இதுவே மிகப்பெரியதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com