சீனா நிலச்சரிவு: 17 பேர் சாவு, 18 பேர் மாயம்

சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காணவில்லை.
சீனா நிலச்சரிவு: 17 பேர் சாவு, 18 பேர் மாயம்

சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 28-ந் தேதி நயோங் கௌன்டி, சாங்ஜியாவான் என்ற இடத்தில் காலை 10:40 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு உயிர்ச்சேதம் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சாங்ஜியாவானின் மற்றொரு பகுதியான குய்சுவா என்ற இடத்தில் திங்கள்கிழமை காலை 10:40 மணியளவவில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த சுமார் 34 வீடுகளும் சேதமடைந்தன.

இதே பகுதியின் யுன்னன் ப்ரோவின்ஸ் என்ற மற்றொரு பகுதியில் செவ்வாய்கிழமை காலை 9:45 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதுவரையில் அப்பகுதிகளில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 17 பேர் இறந்ததாகவும், 18 பேர் காணவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 3 லட்சத்து 79 ஆயிரத்து 100 டாலர்கள் நிவாரணத் தொகையை சீன அரசு அளித்துள்ளது. மேலும் பாதிப்படைந்த மக்களுக்கு உணவு, உடை மற்றும் தற்காலிக இருப்பிடத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. மொத்தம் 195 பேர் இந்த உதவி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழு, காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றில் இருந்து சுமார் 2,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 90 அவசரகால வாகனங்கள், 17 மீட்பு வாகனங்கள், 8 நிலச்சரிவு மீட்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com