டோக்கா லாம் விவகாரத்தில் பலதரப்பட்ட விளக்கங்கள் தேவையில்லை

டோக்கா லாம் விவகாரத்தில் பலதரப்பட்ட விளக்கங்கள் தேவையில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
டோக்கா லாம் விவகாரத்தில் பலதரப்பட்ட விளக்கங்கள் தேவையில்லை

டோக்கா லாம் விவகாரத்தில் பலதரப்பட்ட விளக்கங்கள் தேவையில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பகுதி டோக்கா லாம். இது, பூடானுக்கு சொந்தமான பகுதி என்றபோதிலும், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, தற்போது டோக்கா லாம் இந்தியாவின் வசம் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், டோக்கா லாம் பகுதிக்குள் கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதையடுத்து, நூற்றுக்கணக்கான இந்திய ராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு சாலைப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரும் ஏராளமாக குவிக்கப்பட்டனர். இதனால், இந்தியா - சீனா இடையே போர்ச் சூழல் நிலவி வந்தது.
இதனிடையே, இரு நாடுகள் இடையே தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் பயனாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு டோக்கா லாம் பகுதியிலிருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளப்பட்டனர். இது, இந்திய அரசின் ராஜதந்திர வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியிடம் செய்தியாளர்கள் புதன்கிழமை கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
டோக்கா லாம் விவகாரம் மிகவும் பதற்றம் நிறைந்த ஒன்று. இந்த விவகாரத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டது குறித்து ஏற்கெனவே மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்திவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் பலதரப்பட்ட விளக்கங்கள் தேவையில்லை என ஜேட்லி தெரிவித்தார்.
பொதுத்துறை நிறுவனங்களிலும் கிரீமிலேயர்: இதனிடையே, மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு (கிரீமிலேயர்) ரூ.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது பொதுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அருண் ஜேட்லி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com