லண்டன் மேயர் இன்று இந்தியா வருகை

"பிரெக்ஸிட்'டுக்குப் பிறகும் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்தியாவுக்குள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்குவதற்காக, அந்த நகர மேயர் சாதிக் கான் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) இந்தியா வருகிறார்.

"பிரெக்ஸிட்'டுக்குப் பிறகும் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்தியாவுக்குள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்குவதற்காக, அந்த நகர மேயர் சாதிக் கான் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) இந்தியா வருகிறார்.
இந்தியாவில் மும்பை, தில்லி, அமிருதசரஸ் ஆகிய நகரங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், மூத்த அரசியல் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள், பிராந்தியத் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். அவருடன், வர்த்தகத்துக்கான துணை மேயர் ராஜேஷ் அகர்வாலும் வருகிறார்.
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி ஆகிய நகரங்களிலும் சாதிக் கான் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியதற்குப் பிறகு ஏற்பட்டுள்ள புதிய வர்த்தகச் சூழலில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உள்ள சாதக அம்சங்களை விளக்கும் நோக்கில் இருநாடுகளின் 6 நகரங்களிலும் அவர் 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
வர்த்தக முதலீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக மேயர் சாதிக் கான், துணை மேயர் ராஜேஷ் அகர்வால் ஆகியோர் அந்த நகரங்களில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com