வட கொரியா விவகாரம்: அமைச்சர்களின் அவசரக் கூட்டத்துக்கு ஜப்பான் அழைப்பு

வட கொரியா விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டத்துக்கு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது.

வட கொரியா விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டத்துக்கு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது.
வட கொரியாவின் புதிய சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை கிழக்கு ஆசிய பகுதியில் பெரும் பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தைக் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என்று ஐ.நா.வுக்கான ஜப்பான் தூதர் கோரோ பெஷ்ஷோ கூறினார். நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: 
வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் மீறி அந்த நாடு அண்மையில் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. முந்தைய தடைகளையும் அந்நாடு மீறியுள்ளது என்பது தெரிந்ததே. எனவே இவற்றையெல்லாம் கடந்து நாம் வட கொரியாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
புதிய ஏவுகணை சோதனையின் பின்னணியில், எந்த வகையான சர்வதேச நடவடிக்கை சரியான பயன் தரும் என்பது குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டம் நடத்த ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவு நிரந்தர உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்கு அளிக்கப்படும்.
எந்த விதத்திலாவது வட கொரியாவின் அணு ஆயுதக் குவிப்பைத் தடுக்க வேண்டும். 
உலகில் அணு ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளான ஒரே நாடு என்ற வகையிலும் வட கொரியா தற்போது குறி வைத்துள்ள நாடு என்ற வகையிலும் ஜப்பான் அதனை வலியுறுத்தும் என்றார் அவர்.
இதனிடையே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியா விவகாரம் குறித்துப் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதின்மூன்றாயிரம் கிலோமீட்டர் தொலைவு பறந்து அமெரிக்க நகரங்களைத் தாக்க வல்லதாகக் கூறப்படும் சக்தி வாய்ந்த ஏவுகணையை வட கொரியா கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்தது.
போரைத் தூண்டும் விதமாக அந்நாடு நடந்து கொள்கிறது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்திருந்தார். அமெரிக்காவுடன் மோதினால் வட கொரியா முற்றிலுமாக அழிந்துவிடும் என்று அவர் பாதுகாப்பு கவுன்சில் நடத்திய அவசர கூட்டத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com