2017-ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தலைவர்கள்: 2-ஆம் இடம்பிடித்த நரேந்திர மோடி!

ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டான தலைவர்களின் பட்டியலை ட்விட்டர் தலைமை நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டது.
2017-ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தலைவர்கள்: 2-ஆம் இடம்பிடித்த நரேந்திர மோடி!

2017-ம் ஆண்டு நிறைவுபெறும் நிலையில், சமூக வலைதளமான ட்விட்டர், நடப்பு ஆண்டில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தலைவர்கள் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது. 

இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2-ஆவது இடத்தைப் பெற்றார்.

மேலும், நடப்பு ஆண்டிலேயே உலகளவில் ட்விட்டரில் இந்த இரு தலைவர்களும் தான் ஆதிக் ட்வீட் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாகம் வெளியிட்ட பட்டியலில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலகளவில் 44.1 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். இது அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு அதிகரித்துள்ளது. அதுபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடியை 37.5 மில்லியன் நபர்களால் பின்தொடரப்படுகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, நிறம் மற்றும் இனம் குறித்து பதிவிட்ட ட்வீட் தான் 2017-ல் உலகளவில் அதிகம் விரும்பப்பட்ட ட்வீட்டகளில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், 2017-ல் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட பதிவுகளில் முதல் 10 இடங்களில் பாரக் ஒபாமா 3 இடங்களை ஆக்கிரமித்துள்ளார். இவரது ட்விட்டர் பக்கத்தை 97.6 மில்லியன் நபர்கள் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com