இந்தியா வருகிறார் சீன அமைச்சர் வாங் யீ

இந்தியா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன நிதி அமைச்சர் வாங் யீ இந்தியா வருகை தரவுள்ளார்.

இந்தியா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன நிதி அமைச்சர் வாங் யீ இந்தியா வருகை தரவுள்ளார்.
இந்தியா-பூடான்-சீனா ஆகிய 3 நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டோக்கா லாம் பகுதி விவகாரத்துக்குப் பிறகு, சீனாவிலிருந்து இந்தியா வரும் அரசுத்தரப்பு உயர் அதிகாரி வாங் யீ என்பது குறிப்பிடத்தக்கது.
3 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜென்ஞ் ஷாங் கூறுகையில், 'தில்லியில் நடைபெறவுள்ள 3 நாடுகள் பங்கேற்கும் 15-ஆவது வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
இந்த மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார். டோக்காலாம் பகுதியில் சீன ராணுவம், சாலை அமைத்து ஆக்கிரமிக்க முயற்சி செய்தது. அந்த முயற்சியை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டனர். இதனால், பதற்றமான சூழல் நிலவி வந்தது. சுமார் 73 நாள்கள் நீடித்த இந்தப் பதற்றம், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com