மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் குவிப்பு

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அறிவித்ததையடுத்து, மேற்குக் கரையில் கூடுதலாக இஸ்ரேல் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பாக வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது: 
ராணுவத் தலைமையகம் நடத்திய ஆய்ûவைத் தொடர்ந்து, மேற்குக் கரையில் கூடுதல் படைப் பிரிவுகளை ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவை தவிர, பாதுகாப்புத் தகவல் சேகரிப்புக்கான ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதியின் நிலைமையைப் பொருத்து, ராணுவம் எத்தகைய தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது என்று இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com