காஸா ஏவுகணை வீச்சுக்கு இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்

காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் போர் விமானங்கள் பதிலடித் தாக்குதல் நடத்தின.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட ஹமாஸ் ஆயுதக் கிடங்கு.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட ஹமாஸ் ஆயுதக் கிடங்கு.

காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் போர் விமானங்கள் பதிலடித் தாக்குதல் நடத்தின.
இதில் இரு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக காஸாவில் ஆட்சிபுரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருப்பது:
காஸாவின் மத்திய பகுதியில் உள்ள நுúஸரத்தில் அமைந்திருக்கும் ஹமாஸ் ராணுவ நிலை மீது சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் இருவர் பலியாகினர். பல மணி நேரத்துக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து இருவரது உடல்களும் மீட்கப்பட்டன என்று ஹமாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் பலியான இருவர் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.
இதற்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை, காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதன் மூலம் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
ஹமாஸ் இயக்கம் ஆட்சிபுரிந்து வரும் காஸா பகுதியிலிருந்து இந்தத் தாக்குதல் நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அந்தத் தாக்குதல்களுக்கு காஸாவில் உள்ள சலாஃபி பிரிவைச் சேர்ந்த சலாஹிதீன் படையினர் பொறுப்பேற்றனர்.
இருந்த போதிலும், காஸாவிலிருந்து நடத்தப்படும் எந்தத் தாக்குதலுக்கும் ஹமாஸ்தான் பொறுப்பு என்று இஸ்ரேல் கூறி வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தியது. 
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது: 
இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை மூன்று முறை ஏவுகணை வீச்சு நடத்தினர். அதில் முதல் ஏவுகணை இஸ்ரேலின் ùஸடரோட் நகரில் விழுந்த போதிலும் அது வெடிக்கவில்லை. காஸாவிலிருந்து செலுத்தப்பட்ட மற்றொரு ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது. 
காஸாவிலிருந்து செலுத்தப்பட்ட மேலும் ஓர் ஏவுகணை இஸ்ரேல் எல்லைக்குள் கடந்து வரும் முன்னரே விழுந்தது.
இந்த ஏவுகணைத் தாக்குதல்களையடுத்து, காஸாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் இலக்குகளைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவ விமானங்கள் பதிலடித் தாக்குதல் நடத்தின. அந்தத் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் ஆயுத உற்பத்தி மையம், ஆயுதக் கிடங்கு மற்றும் ஹமாஸ் ராணுவ நிலை அழிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com