துருக்கியின் இஸ்தான்புல் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) மாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) மாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்.

ஜெருசலேமை பாலஸ்தீனத் தலைநகராக அங்கீகரிக்க வேண்டும்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீன நாட்டின் தலைநகராக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீன நாட்டின் தலைநகராக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்த பாலஸ்தீனத் தலைவர் மஹமூத் அப்பாஸ், இத்தகைய நடவடிக்கையை எடுக்காத வரை மேற்கு ஆசியாவில் ஒருபோதும் அமைதி ஏற்படாது என்று எச்சரித்துள்ளார்.
ஜெருசலேம் நகரை இஸ்ரேலில் தலைநகராக அங்கீகரிக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.
அதையடுத்து, இந்தச் சூழலை எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக முஸ்லிம் நாடுகளின் முக்கிய கூட்டமைப்பான "இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு' (ஐஓசி) மாநாட்டை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் அந்த நாட்டு அதிபர் எர்டோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பாலஸ்தீனர்களின் நலன்களைக் காப்பதற்காக நான் முன்னணியில் இருந்து போராடி வருகிறேன். ஜெருசலேம் நகரை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், அங்கு பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றி வருகிறது.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதன் மூலம், அந்த நாடு செய்து வரும் பயங்கரவாதச் செயல்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கீகாரம் வழங்குகிறார்.
உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனத்தின் தலைநகராக அங்கீரக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை இஸ்லாமிய நாடுகள் ஒருபோதும் கைவிடக் கூடாது என்றார் அவர்.
அப்போது பேசிய பாலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், "ஜெருசலேம் என்பது எப்போதுமே பாலஸ்தீனத்தின் தலைநகராத்தான் இருந்து வருகிறது. இந்த உண்மை அங்கீகரிக்கப்படும் வரை மேற்கு ஆசியாவில் அமைதி ஏற்படாது' என்று எச்சரித்தார்.
மேலும், அமெரிக்காவுக்குச் சொந்தமான நகரைப் போல ஜெருசலேமை அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்குத் தாரை வார்த்துத் தருவதாகக் குற்றம் சாட்டிய அவர், மேற்காசிய சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இனி அமெரிக்காவுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com