ஹெச்-1பி விசா சலுகையை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை

அமெரிக்காவில் ஹெச்-1பி விசாதாரர்களின் வாழ்க்கை துணையும் பணிபுரிவதை அங்கீகரிக்கும் வகையில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சியில் அளிக்கப்பட்ட சலுகையை ரத்து செய்வதற்கு தற்போதைய அதிபர்
ஹெச்-1பி விசா சலுகையை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை

அமெரிக்காவில் ஹெச்-1பி விசாதாரர்களின் வாழ்க்கை துணையும் பணிபுரிவதை அங்கீகரிக்கும் வகையில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சியில் அளிக்கப்பட்ட சலுகையை ரத்து செய்வதற்கு தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம் ஏராளமான இந்திய ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.
இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர், அமெரிக்காவுக்கு பணி நிமித்தமாக செல்வதற்கு ஹெச்1-1பி விசாக்களை அந்நாடு வழங்குகிறது. இந்த விசாதாரர்களின் வாழ்க்கை துணையும் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான நடைமுறையை எளிமைபடுத்தி, முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது கடந்த 2015-ஆம் ஆண்டில் சலுகை வழங்கப்பட்டது. அதன்படி, ஹெச்-4 சார்பு விசாவின்கீழ், ஹெச்-1பி விசாதாரர்களின் வாழ்க்கை துணைகளும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், இதற்கென சில விதிமுறைகள் உள்ளன. 
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் சுமார் 41 ஆயிரம் ஹெச்-4 விசாதாரர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நிகழாண்டில் கடந்த ஜூன் வரை சுமார் 36 ஆயிரம் ஹெச்-4 விசாதாரர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், அமெரிக்கப் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் ஹெச்-1பி விசா வழங்குதலில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், மேற்கண்ட சலுகையை ரத்து செய்வது குறித்தும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இச்சலுகை ரத்து செய்யப்பட்டால், ஹெச்-1பி விசாதாரர்களின் மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ அமெரிக்காவில் பணி கிடைப்பது மிக கடினமானதாகிவிடும்; இதன் மூலம் திறன்வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது நாட்டுக்கு வருவதை குறைக்க முடியும் என்று டிரம்ப் நிர்வாகம் கருதுவதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com