அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!

அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள் என்று கூவியபடி மதுபான விடுதியில் இந்திய மென் பொறியாளரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற
அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!

வாஷிங்டன்: அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள் என்று கூவியபடி மதுபான விடுதியில் இந்திய மென் பொறியாளரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கென்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(32) என்பவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சாஸ் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப் பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து, ரசித்து கொண்டிருந்தனர்.

மும்முரமான ஆட்டத்தின்போது அங்கு வந்த 51 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென ஆவேசமாக, தனது கைத்துப்பாக்கியை ஏந்தியபடி இந்தியர்கள் இருவரையும் அமெரிக்காவை விட்டு வெளியேறும்படி கத்தியபடி சரமாரியாக சுட்டான். அந்த வெறித்தனமான தாக்குதலில் ஸ்ரீனிவாஸ் என்ற பொறியாளர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சகப் பணியாளரான அலோக் மடசனி, இயன் கிர்ல்லாட் என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற கொலையாளி, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் மிசோரியில் உள்ள மதுபான விடுதியில் குடித்துவிட்டு, துப்பாக்கிச் சூட்டில் இருவரை கொன்று விட்டதாக உளறியுள்ளான்.

இதை அறிந்த அந்த விடுதியின் பணியாளர் அளித்த தகவலையடுத்து, விரைந்துவந்த போலீஸார் கொலையாளியை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸார். கைதான ஆடம் புரின்டன்(51) முன்னாள் கடற்படை வீரர் என தெரியவந்துள்ள நிலையில் இந்த இனவெறி சார்ந்த படுகொலை தொடர்பான தகவல் கிடைத்ததும், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், ஸ்ரீனிவாஸ் மற்றும் அலோக் ஆகிய இருவரையும் மத்திய கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தவறாகப் புரிந்துகொண்டு, இனவெறியில் சுட்டுக் கொன்றதாக, தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com