ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் விலகல்: பிரிட்டன் அறிவிப்பு

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும்போது, ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும் என்று அந்த நாட்டின் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் விலகல்: பிரிட்டன் அறிவிப்பு

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும்போது, ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும் என்று அந்த நாட்டின் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்காக, அதன் 28 உறுப்பு நாடுகளுடன் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தை அம்சங்கள் குறித்து தெரசா மே லண்டனில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகினாலும், ஐரோப்பிய பொதுச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்கலாம் என்ற யோசனையை ஏற்க முடியாது.
தனி நாடுகள் இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளப்படும்.
யூனியலிருந்து விலகுவதற்கான இறுதி ஒப்பந்தம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றார் அவர்.
எனினும், நாடாளுமன்றத்தில் அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்குமா, அல்லது அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாமலேயே அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுமா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஐரோப்பிய பொதுச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்தால், பிற ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கட்டுப்பாடற்ற அனுமதி வழங்க வேண்டியிருப்பதோடு, ஐரோப்பிய நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கும் பிரிட்டன் கட்டுப்பட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com