ஒபாமாவைவிட டிரம்ப் மோசமாக இருந்துவிட முடியாது!

அடுத்த அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தற்போதைய அதிபர் ஒபாமாவைவிட மோசமாக இருந்துவிட முடியாது
ஒபாமாவைவிட டிரம்ப் மோசமாக இருந்துவிட முடியாது!

அடுத்த அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தற்போதைய அதிபர் ஒபாமாவைவிட மோசமாக இருந்துவிட முடியாது என்று வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ கருத்து தெரிவித்துள்ளார்.
தலைநகர் கராகஸில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஊடகங்கள் பிரசாரம் நடத்தி வருகின்றன. அவருக்கு எதிராக அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வெறுப்பை உமிழும் கொடூரமான பிரசாரம் நடப்பதைக் காணும்போது எனக்கு வியப்பாகவே இருக்கிறது.
ஒரு நாட்டின் அதிபர் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்கும் வரை நான் பொறுத்திருக்க விரும்புகிறேன்.
பதவியேற்புக்கு முன்பு டிரம்ப் வெளியிடும் கருத்துகளை வைத்து அவரை மதிப்பிட வேண்டியதில்லை. அவரது கொள்கைகளை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தும் வரை பொறுமை காக்க விரும்புகிறேன்.
என்னைப் பொருத்த வரையில், தற்போதைய அதிபர் ஒபாமாவைவிட டிரம்ப் மோசமான அதிபராக இருந்துவிட முடியாது என்று மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் என்று நிக்கோலஸ் மடூரோ தெரிவித்தார்.
இடதுசாரி அரசியல்வாதியான மடூரோ, வெனிசூலாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com