வடகொரியா தக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் எச்சரிக்கை

நியூயார்க்: வடகொரியா தனது நடவடிக்கைகளுக்கு தக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வியாழக்கிழமை தெரிவித்தார்.
வடகொரியா தக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் எச்சரிக்கை

வடகொரியா சமீபத்தில் புதிய ரக அணு ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:

இது மிக மிக தவறான சம்பவம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்காக வடகொரியா வெட்கப்பட வேண்டும். அவர்கள் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் நாம் எதாவது செய்தாக வேண்டும். 

இதனால் உலக நாடுகள் இடையிலான அமைதி சீர்குலைய வாய்ப்புள்ளது. இச்செயல் உலகளாவிய அச்சுறுத்தலாகும். வடகொரியாவின் இதுபோன்ற செயல்கள் குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. என்ன நடைபெறுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

நாம் அனைவரும் நினைப்பது போன்று நான் சில முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசித்து வருகிறேன். அதற்காக நாம் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. நான் எதையும் வரையறுப்பதில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com