எல்லையில் பதற்றம்: ஜெர்மனியில் பிரதமர் மோடி, சீன அதிபர்  ஜின்பிங் 'நேருக்கு நேர்'!

சிக்கிமின் 'டோக்லாம்' பிரதேச விவகாரம் காரணமாக இந்திய -சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் வேளையில், இருநாட்டுத் தலைவர்களும் ஜெர்மனியில் நிகழ்வு ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள
எல்லையில் பதற்றம்: ஜெர்மனியில் பிரதமர் மோடி, சீன அதிபர்  ஜின்பிங் 'நேருக்கு நேர்'!

ஹம்பர்க்: சிக்கிமின் 'டோக்லாம்' பிரதேச விவகாரம் காரணமாக இந்திய -சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் வேளையில், இருநாட்டுத் தலைவர்களும் ஜெர்மனியில் நிகழ்வு ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிக்கிம் மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள 'டோக்லாம்' பிரதேசதிற்கு சீனா உரிமை கொண்டாடுவதன் காரணமாக இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் அதிக அளவில்  இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் உள்ளிட்ட ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக உள்ள 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்றது. தற்பொழுது இந்த அமைப்புக்கு தற்பொழுது சீன அதிபர் ஜின்பிங் தலைவராக உள்ளார்.  இந்த மாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக இரு நாட்டுத் தலைவர்களளுக்கான நேரடி சந்திப்பு ஏற்பாடு செய்யபடவில்லை. ஆனால மாநாட்டில் மோடி பேசும் பொழுது, ஜின்பிங் தலைமையில் பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளதாகவும், இந்த வருட இறுதியில் சீனாவின் ஜியாமென் நகரில் நடக்க உள்ள  பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு, இந்தியா முழு ஒத்துழைப்பு தரும்' எனவும் தெரிவித்தார்.

முன்னதாக சீன அதிபர் ஜின்பிங் பேசும் பொழுது, 'தீவிரவாதத்தினை எதிர்த்து போராடி வரும் இந்தியாவின் உறுதியினையும், கோவாவில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்குப் பிறகு அதன் செயல்பாடுகளில் உண்டாகியுள்ள உத்வேகத்தினையும் பாராட்டினார்.மேலும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற செயல்பாடுகளில் இந்தியா வெற்றி பெறவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com