அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு!

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு!

ஹம்பர்க்: ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசினார்.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு துவங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பயங்கரவாதம், உறுப்பு நாடுகளின் இடையே திறந்த வர்த்தகம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்க ப் பட உள்ளது.

ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் துவங்கி வைத்த இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். அப்பொழுது இருவரும் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார்.

இருவருக்குமிடையிலான் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு நேரப்படி இன்று மதியம் இருவரும் தனியாக சந்தித்து பேச உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com