பிரதமர் மோடி -  சீன அதிபர் பேச வாய்ப்பு இல்லை

ஜெர்மனியில் வெள்ளிக்கிழமை தொடங்கும் ஜி20 நாடுகள் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சு நடத்த உகந்த சூழ்நிலை இல்லை என்று சீனா கூறியுள்ளது.
பிரதமர் மோடி -  சீன அதிபர் பேச வாய்ப்பு இல்லை

ஜெர்மனியில் வெள்ளிக்கிழமை தொடங்கும் ஜி20 நாடுகள் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சு நடத்த உகந்த சூழ்நிலை இல்லை என்று சீனா கூறியுள்ளது.
இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்னை அதிகரித்துள்ள நிலையில், ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஜி20 மாநாடு வெள்ளிக்கிழமை (ஜூலை 7) தொடங்கி இருநாள்கள் நடைபெறுகின்றன. இதில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அப்போது, இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினால் எல்லையில் நிலவும் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய சீன வெளியுறவுத் துறை அதிகாரிகள், அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் மோடியின் சந்திப்புக்கு உகந்த சூழ்நிலை இப்போது இல்லை. எனவே, ஜி20 மாநாட்டின்போது இரு தலைவர்களும் பேச்சு நடத்த வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர். இதன் மூலம், எல்லைப் பிரச்னையை மையமாக வைத்து இந்தியா மீது தங்களுக்குள்ள கோபத்தை சீனா வெளிப்படுத்தியுள்ளது தெளிவாகியுள்ளது.
அதே நேரத்தில், சீன அதிபருடன் பேச்சு நடத்த வேண்டுமென்று இந்திய சார்பில் எந்த வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
ஜி20 மாநாட்டில் ஆர்ஜெண்டீனா, கனடா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, பிரிட்டன், வியத்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்துப் பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com