பெண்களுக்கு அனுமதி இல்லாத ஜப்பானின் வினோத தீவு: உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம்!

பெண்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லாத, நிர்வாண குளியல் உள்ளிட்ட சடங்குகள் நிரம்பிய ஜப்பானின் வினோத தீவான 'ஒகினோஷிமாவை' உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரமளித்து யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கு அனுமதி இல்லாத ஜப்பானின் வினோத தீவு: உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம்!

டோக்யோ: பெண்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லாத, நிர்வாண குளியல் உள்ளிட்ட சடங்குகள் நிரம்பிய ஜப்பானின் வினோத தீவான 'ஒகினோஷிமாவை' உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரமளித்து யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் தென் மேற்கு பகுதியில் உள்ள பெரிய நிலப்பரப்பான க்யுஷுவுக்கும், கொரிய தீபகற்பதிற்கும் இடையே உள்ளது ஒகினோஷிமா தீவு.நான்காம் நூற்றாண்டில் இருந்து சீனா மற்றும் கொரியாவுடன் தொடர்பு கொள்வதற்கான தொடபு மையமாகவும், கடற்பயணம் செய்வோருக்கான பாதுகாப்பு குறித்து சடங்குகள் செய்யும் இடமாகவும் இது இருந்து வந்தது.

ஷிண்டோ வழியினைச் சேர்ந்த   ஜப்பானின் பாரம்பரியம் மிக்க கோயில்களில் ஒன்றான முனகட்டா தைஷாவின் குருமார்கள் இங்கு வந்து, இங்குள்ள 17-ஆம் நூற்றாண்டின் முக்கியமான வழிபாட்டு தலமான ஒகிட்ஷுவில் பிரார்த்தனை செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.       

அதேபோல் வருடத்திற்குஒரு முறை மே மாதம் 27-ஆம் தேதியன்று, 1904-05 ஆண்டில் நடந்த ரஷ்யா சீனப் போரில், இந்த தீவுக்கு அருகில் நடைபெற்ற கடல் யுத்தத்தில் மாண்டு போன கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது நடைபெறுகிறது  இதில் கலந்து கொள்ள அதிகபட்சம் 200 பேர் வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு கடலில் திரும்பும் முன் நூற்றாண்டுகளாக அங்கு பின்பற்றப்படும் சில சடங்குகளை பின்பற்ற வேண்டும். தங்களது ஆடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக கடலில் குளிக்கும் 'மிசோகி' என்னும் சடங்கினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். அவர்களது அசுத்தத்தினை போக்கவே இத்தகைய சடங்குகள் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.

அங்கு வருபவர்கள் அங்கிருந்து நினைவுப் பொருட்களாக அங்கிருக்கும் சிறு கல், புல் உட்பட எதனையும் எடுத்துச் செல்லக் கூடாது. இத்தகைய சிறப்பு  வாய்ந்த 700 ச.மீ பரப்பளவுள்ள இந்த ஒகினோஷிமா தீவு, அதன் அருகில் உள்ள மூன்று பாறைகள் மற்றும் நான்கு சிறு பிரதேசங்கள் ஆகியவற்றை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரமளித்து யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இத்துடன் சேர்த்து ஜப்பானில் உள்ள பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 21 ஆனது குறிப்பிடத்தக்கது .    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com