'உலக மக்கள் தொகை தினம்' அறிந்ததும்-அறியாததும்

ஒவ்வொரு வருடமும் உலக மக்கள் தொகை தினம் ஜூலை மாதம் 11-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
'உலக மக்கள் தொகை தினம்' அறிந்ததும்-அறியாததும்

'ஜுலை 11' உலக மக்கள் தொகை தினம். ஆம், ஒவ்வொரு வருடமும் இதே நாளில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. உலக அளவில் மக்கள்
தொகை மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக உருவாக்கப்பட்டது.

கி.பி 1650-ம் ஆண்டு முதல் மக்கள்தொகை வேகமெடுத்தது. 1840-ம் ஆண்டில் 100 கோடி, 1927-ம் ஆண்டில் 200 கோடி, 1960-ம் ஆண்டில் 300 கோடி என உயர்ந்து 1999-ம் ஆண்டில் 600 கோடியை அடைந்தது. 

இந்நிலையில், உலக மக்கள் தொகை தற்போது 760 கோடியாக உள்ளது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகை 8 கோடியே 30 லட்சமாக உயருகிறது. 

இதுவே 2030-ம் ஆண்டில் 860 கோடியாகவும், 2050-ம் ஆண்டில் 980 கோடியாகவும், 2100-ம் ஆண்டில் 1,100 கோடியாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் 1.31 சதவீதம் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதுவே ஒரு விநாடிக்கு 2,582  என்ற விகிதத்தில், ஒரு நாளுக்கு 2 லட்சத்து 23 ஆயிரத்து 098 என்று மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

ஆனால், பூமியால் உச்சகட்டமாக 1,200 கோடி பேர் வரை தான் தாக்குபிடிக்க இயலும் என்று ஆராய்ச்சி முடிவில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளில்
கூறப்படுகிறது.

உலகளவில் இந்தியா, அமெரிக்கா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோபியா, உகாண்டா, டான்ஸானியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய 9 நாடுகளில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.  2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் இந்த நாடுகளில் மட்டும் 50 சதவீதம் இருக்கும் என்று ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உலகளவில் ஒப்பிடுகையில் வருகிற காலங்களில் ஆப்பிரிக்க நாடுகளில் தான் அதிகளவில் மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் ஐ.நா
தெரிவித்துள்ளது.

இதுபோன்று அசுரவேகத்தில் உயரும் மக்கள் தொகை காரணமாக இப்போதே பூமியில் கார்பனின் அளவு அரை லட்சம் டன்னை தாண்டிவிட்டது. இதே நிலை
நீடித்தால் புவி வெப்பமயம் சுமார் 6 டிகிரி வரை உயரக்கூடும். இதுவே மனித இனத்தில் அழிவுக்கு வழிவகுக்கும் என இயற்கை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மொத்த நிலப்பரப்பில் வெறும் 2.6 சதவீதம் மட்டுமே இந்தியா உள்ளது. ஆனால், உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் பெற்றுள்ளது. இதுவே வருகிற 2024-ம் ஆண்டிற்குள் இந்திய மக்கள் தொகை சீனாவை முந்தும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

இந்தியாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு மட்டும் 387 பேர் வசிக்கின்றனர். இதுவே சென்னையில் மட்டும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 27,000 பேர்
வசிப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com