மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு: சீனா விளக்கம்

ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரப்பூர்வமாக எவ்வித இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று சீனா விளக்கமளித்தது.
மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு: சீனா விளக்கம்

ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரப்பூர்வமாக எவ்வித இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று சீனா விளக்கமளித்தது.
முன்னதாக, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சீனா தரப்பில் அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, ஜி ஜின்பிங்குடன் கைகுலுங்கிய மோடி அவருடன் சுமார் 5 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டிருந்தார். இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசியதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அது தொடர்பான விரிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சிக்கிம் மாநிலம் டோகா லா பகுதி தொடர்பாக இந்தியா- சீனா இடையே பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு முந்தைய நாள், இரு தலைவர்களும் சந்தித்துப் பேச இப்போது உகந்த சூழல் இல்லை என்று சீன வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், அவர்கள் கூறியதற்கு மாறாக இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர். இது சீன தரப்புக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஜிங் சுவாங் கூறியதாவது:
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி மோடியும், ஜி ஜின்பிங்கும் அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேசவில்லை. ஜி20 மாநாட்டின் ஒருபகுதியாக பிரிக்ஸ் நாடுகளின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் சீனா தலைமையில் நடைபெற்றது. அதில் இந்தியப் பிரதமர் மோடியும் பங்கேற்றார். அப்போது, இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
எல்லையில் குவித்துள்ள ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் திரும்பப் பெற்றால் மட்டும்தான் அவர்களுடன்எல்லைப் பிரச்னை குறித்துப் பேச முடியும். எல்லையில் இருந்து வீரர்களை இந்தியா உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பதை மட்டுமே சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com