அமெரிக்காவில் ராணுவ விமான விபத்து: 16 பேர் சாவு

அமெரிக்க பாதுகாப்பு படைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் விமானம் திங்கள்கிழமை விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரியும் அமெரிக்க பாதுகாப்புப் படை விமானம்.
விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரியும் அமெரிக்க பாதுகாப்புப் படை விமானம்.

அமெரிக்க பாதுகாப்பு படைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் விமானம் திங்கள்கிழமை விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது:
பாதுகாப்புப் படைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் கேசி- 130 ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது.
மிஸ்ஸிஸிப்பி மாகாணம், சன்ஃப்ளவர்- லெப்லோர் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணம் செய்த 16 பேரும் உயிரிழந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விமானத்தில் பிடித்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மிஸ்ஸிஸிப்பி ஆளுநர் ஃபில் பிரையன்ட், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
தங்களது விமானம் விழுந்து நொறுங்கியதை அமெரிக்க பாதுகாப்புப் படை உறுதி செய்த போதிலும் கூடுதல் விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com