'உங்கள் உடற்கட்டு அற்புதம்'- ஃப்ரான்ஸ் அதிபர் மனைவியை வர்ணித்த டொனால்டு டிரம்ப்

ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் மனைவி ப்ரிக்கிட்டி மேக்ரோனின் உடற்கட்டு அற்பதமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
'உங்கள் உடற்கட்டு அற்புதம்'- ஃப்ரான்ஸ் அதிபர் மனைவியை வர்ணித்த டொனால்டு டிரம்ப்

ஃப்ரான்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டொனால்டு டிரம்ப், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதில் டொனால்டு டிரம்ப் மனைவி மெலனியாவும் உடனிருந்தார்.

அப்போது, அமெரிக்க அதிபர் தம்பதியை வாசலில் நின்று தங்கள் முறைப்படி ஃப்ரான்ஸ் அதிபர் தம்பதி வரவேற்றனர். முதலில் டிரம்புடன் கைகுலுக்குவதில் ஃப்ரான்ஸ் அதிபர் மனைவிக்கு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, நடைபெற்ற உரையாடலின் போது ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் மனைவி ப்ரிக்கிட்டி மேக்ரோனிடம் (61 வயது), அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (71 வயது) கூறியதவாது:

நீங்கள் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் உள்ளீர்கள். உங்கள் உடற்கட்டு அற்புதமாக உள்ளது என்றார். 

முன்னதாக, இதுபோன்று பெண்களை வெளிப்படையாக வர்ணித்து பலமுறை பல விதமான சர்ச்சைகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com