ஆப்கன் பயங்கரவாதம்: 6 மாதங்களில் 1,662 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 1,662 பொதுமக்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 1,662 பொதுமக்கள் பலியாகினர்.
இதுகுறித்து ஐ.நா. திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2017-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள் 1,662 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 20 சதவீதம் பேர் காபூல் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதுதான் உச்சபட்ச அளவைத் தொட்டுள்ளது.
மே மாதத்தில் காபூல் நகரில் வெடி பொருள்கள் நிரப்பிய வாகனத்துடன் வந்த பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் மட்டும் 150 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரையில் 26,500 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 49,000 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com