சவுதியில் 'ஸ்கர்ட்' அணிந்த பெண் கைது...!

முழு உடலையும் மறைக்காமல் ஸ்கர்ட் எனப்படும் குட்டைப்பாவாடை அணிந்த பெண் சவுதி அரேபியாவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
சவுதியில் 'ஸ்கர்ட்' அணிந்த பெண் கைது...!

சவுதி அரேபியாவின் மிகவும் பாரம்பரியப் பகுதியாக் கருதப்படும் இடத்தில் பெண் ஒருவர் குட்டைப் பாவாடை அணிந்து சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு நாடுகளில் பெண்கள் தங்கள் முழு உடலையும் மறைக்கும் விதாமகத்தான் உடை அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. அதிகபட்சமாக அவர்கள் கண்கள் மற்றும் கைகளுக்கு அதிலிருந்து விதிவிலக்கு உள்ளது.

மேலும் ஒரு சில இடங்களில் தங்களின் முகங்களை மறைக்க வேண்டிய கட்டாயமில்லை. 

இந்நிலையில், அங்கு மிகப் பாரம்பரியப் பகுதியாகக் கருதப்படும் நாஜித் ப்ரோவின்ஸின் உஷாய்கிர் என்ற கிராமத்தில் இஸ்லாமியப் பெண் ஒருவர் ஸ்கர்ட் எனப்படும் குட்டைப் பாவாடையுடன் வலம் வந்துள்ளார்.

இந்த விடியோ குலூத் என்பவரின் சமூக வலைதள பக்கமான ஸநாப் சாட்டில் பகிரப்பட்டது. இது அந்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் வலம் வந்தன.

இதையடுத்து, அந்தப் பெண் ரியாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் என சவுதி அரேபியாவின் உள்ளூர் தொலைக்காட்சியான ஏக்பரியா, தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com