அமெரிக்க மூத்த எம்.பி. ஜான் மெக்கெயினுக்கு கடுமையான மூளைப் புற்றுநோய்

அமெரிக்காவின் மூத்த எம்.பி.யும், பாதுகாப்புப் படைகளுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவருமான ஜான் மெக்கெயின் (80) கடுமையான மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது
அமெரிக்க மூத்த எம்.பி. ஜான் மெக்கெயினுக்கு கடுமையான மூளைப் புற்றுநோய்

அமெரிக்காவின் மூத்த எம்.பி.யும், பாதுகாப்புப் படைகளுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவருமான ஜான் மெக்கெயின் (80) கடுமையான மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மெக்கெயின், இந்தியாவுக்கு மிக ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மாயோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மூத்த அரசியல்வாதியான ஜான் மெக்கெயின், தனது இடது கண்ணில் ஏற்பட்ட ரத்தக்கட்டியை நீக்குவதற்காக எங்களது மருத்துவமனையை அணுகினார்.
அதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அந்த ரத்தக்கட்டி இந்த மாதம் 14-ஆம் தேதி அகற்றப்பட்டது.
எனினும், அந்த சிகிச்சையின்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் மெக்கெயினுக்கு மூளையில் 'கிளையோப்ஸ்டோமா' எனும் புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டுள்ளதே, அந்த ரத்தக்கட்டிக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டது.
அந்தப் புற்றுநோய்க்கு எவ்வாறு சிகிச்சை பெறுவது என்பது குறித்து ஜான் மெக்கெயினும், அவரது குடும்பத்தினரும் எங்களது மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து வருகின்றனர்.
கதிரியக்க சிகிச்சையுடன் ரசாயன சிகிச்சையை (கீமோதெரபி) கலந்து செய்வது உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைத் தேர்வுகள் அவர்கள் முன் உள்ளன.
தற்போது ரத்தக்கட்டியை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு மெக்கெயினின் உடல் நலம் தேறி வருவதாக அவரது குடும்ப மருத்துவர் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளையில் ஏற்படக் கூடிய புற்றுநோய்களில் 'கிளையோப்ஸ்டோமா' மிக வேகமாகப் பரவக்கூடியது ஆகும்.
எவ்வளவு கடுமையான சிகிச்சைஅளித்தாலும், இந்த நோயிலிருந்து குணம் பெறுவது மிகவும் அபூர்வம் என்று கூறப்படுகிறது.
பொதுவாக இந்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் 12 முதல் 15 மாதங்கள் வரையே உயிர்வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 3-லிருந்து 5 சதவீதம் வரையிலானவர்கள் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2008-ஆம் ஆண்டில் மற்றொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எம். கென்னடிக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, 15 மாதங்கள் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்தார் என்பது நினைவுகூரத் தக்கது.
இந்தியாவுக்குச் சாதகமானவர்: வியதாநாம் போரில் பங்கேற்று, போர்க் கைதியாக இருந்த முன்னாள் கடற்படை வீரரான ஜான் மெக்கெயின், இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்.
அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டணி நாடுகளுக்கு இணையாக இந்தியாவுடன் நட்புறவை மேம்படுத்த வேண்டும் என்று அவர் அரசை வலியுறுத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com