ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை: வட கொரியா

கடந்த வாரம் நடத்திய சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் நடத்திய சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது: கடந்த வாரம் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ஐ.சி.பி.எம்.) வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது. வட கொரியாவின் தற்காப்புக்காக எடுத்துள்ள இந்த நடவடிக்கை முற்றிலும் நியாயமானது. வட கொரியாவுக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிடுவது, சர்வதேச நெருக்கடி அளிப்பது, பொருளாதாரத் தடைகளை விதிப்பது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக ஏவுகணை சோதனை நடத்தி எச்சரித்துள்ளோம். வட கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என்று இனி யாரும் மிரட்ட முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட கொரியா கடந்த வாரம் ஹுவாசோங்-4 ரக ராக்கெட் மூலம் சோதனை செய்த இரண்டாவது ஐ.சி.பி.எம். முந்தையதைவிட சக்தி வாய்ந்தது என்று மேற்கத்திய நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்காவின் கிழக்கு கரை நகரங்களை இலக்கு வைத்து வட கொரியாவால் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்த முடியும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆயுதமேந்தி 10,000 கி.மீ. பறந்து சென்று இலக்கைத் தாக்கக் கூடிய திறனை வட கொரியா பெற்றுவிட்டது என்று பாதுகாப்புத் துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com