சுற்றுச்சூழலைக் காக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது: நிக்கி ஹேலி

சுற்றுச்சூழலைக் காக்கவும் பூமி வெப்பமயமாதலைத் தடுக்கவும் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது என்று ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்தார்.
சுற்றுச்சூழலைக் காக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது: நிக்கி ஹேலி

சுற்றுச்சூழலைக் காக்கவும் பூமி வெப்பமயமாதலைத் தடுக்கவும் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது என்று ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்தார்.

பருவ நிலை மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கைவிட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பங்களை உலக நாடுகள் கையாள வேண்டும் என்பது தொடர்பாக "பாரீஸ் ஒப்பந்தம்' என்று அறியப்படும் விரிவான சர்வதேச உடன்படிக்கை 2015-இல் கையெழுத்தானது. அதிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்தார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பொறுப்பற்ற நடவடிக்கை என்ற கண்டனத்தையும் பெற்றது.
இந்த நிலையில் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்து நிக்கி ஹேலி கருத்து வெளியிட்டார். இது தொடர்பாகத் தலைநகர் வாஷிங்டனில் அவர் மேலும் தெரிவித்ததாவது: பருவ நிலை மாற்றம் குறித்து அதிபர் டிரம்ப் நன்கு அறிவார். ஒபாமா அதிபர் பதவி வகித்த காலத்தில் ஏற்கப்பட்ட விதிமுறைகள் மிகக் கடுமையானவை. சுற்றுச் சூழல் குறித்த தனது இலக்குகளை அமெரிக்கா அடையவே முடியாது.
பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் என்று பிற நாடுகள் உபதேசம் செய்ய நினைக்கின்றன. ஆனால் அமெரிக்காவுக்கு எது சரியான வழி என்று தோன்றுகிறதோ அந்த வழிமுறையைக் கையாளும். சுற்றுச்சூழலைக் காக்கவும் பூமி வெப்பமயமாதலைத் தடுக்கவும் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. அமெரிக்காவின் நலனை ஒருபோதும் விட்டுத் தராத வகையில் அதிபர் தகுந்த முடிவெடுப்பார் என்றார் நிக்கி ஹேலி.
"பருவ நிலை மாற்றத்தை தடுக்க இயற்றப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளை ஒபாமா ஏற்றார். அமெரிக்காவுக்குப் பெரும் பாதக விளைவுகளைத் தரும் அவற்றை செயல்படுத்தத் தொடங்கினால், நமது தொழில்துறை நஷ்டம் அடைவதோடு, லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும்' என்று டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
"என்னைத் தேர்ந்தெடுத்தது அமெரிக்க தொழிலாளர்கள்; பாரீஸ் தொழிலாளர்கள் அல்ல; எனவே அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைக் காக்கும் விதமாக என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவெடுப்பேன்' என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com