மூக்கு இல்லாமல் பிறந்த குழந்தை 2 வயதில் மரணம்: தந்தையின் நெஞ்சை உருக்கும் பதிவு

அலபாமாவில் மூக்கு இல்லாமல் பிறந்த அரிதானக் குழந்தை 2 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென மரணம் அடைந்தது. அந்த குழந்தை பற்றிய நினைவுகளை அதன் தந்தை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
மூக்கு இல்லாமல் பிறந்த குழந்தை 2 வயதில் மரணம்: தந்தையின் நெஞ்சை உருக்கும் பதிவு

அலபாமாவில் மூக்கு இல்லாமல் பிறந்த அரிதானக் குழந்தை 2 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென மரணம் அடைந்தது. அந்த குழந்தை பற்றிய நினைவுகளை அதன் தந்தை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிராண்டி  மெக்கெல்லாதிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு மூக்கு இல்லாமல் இருப்பதைப் பார்த்து அவளும், கணவர் எலி தாம்ப்ஸனும் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தை பிறக்கும் போதே, பிறவியிலேயே மூக்கில்லாத குறைபாட்டுடன் பிறந்தது. இது மிகவும் அரிதான குறைபாடாகும். அவது பெற்றோர் அவனை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். இவனைப் பற்றிய தகவல்கள் சமூக தளங்களில் பரவியதால், பலருக்கும் இவன் செல்லக் குழந்தையானான்.

ஆனால், எதிர்பாராத விதமாக இந்த குழந்தை தனது 2ம் வயதில் ஜூன் 3ம் தேதி மரணம் அடைந்தான்.

இது குறித்து அவனது தந்தை தனது  பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, எங்களது சின்னஞ்சிறு குழந்தையை நாங்கள் இழந்துவிட்டோம். ஏன் இப்படி நடந்தது என்றே புரியவில்லை. இது எங்களை வெகுவாக பாதித்துள்ளது. இதில் இருந்து எங்களால் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வர முடியாது. நிச்சயம் நான் அதிர்ஷ்டசாலிதான். ஏன் என்றால், ஒரு அழகான சின்னஞ்சிறு குழந்தை எனக்குக் கிடைத்தது. ஆனால் வெகு சீக்கிரத்திலேயே அவனை கடவுள் அழைத்துக் கொண்டார். நான் அவனை அதிகமாக நேசிக்கிறேன். என் தந்தையின் ஆத்மாவுடன் அவனது ஆத்மாவும் இளைப்பாறும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு ஆய்வறிக்கையின் அடிப்படையில், உலகில் 41 பேர் முகத்தில் அரிதான குறைபாடுகளுடன் பிறந்துள்ளனர். அதில், மூக்குத்துவாரம் இல்லாமல் இருப்பது மிகவும் அரிதானது. 2015ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி எலி தாம்ப்ஸன் பிறந்தான்.  அவன் பிறக்கும் போது மூக்கு இல்லாமல், மூக்கு துவாரங்கள் இல்லாமல் இருந்தான்.

அதற்காக அவன் பிறந்த 5 நாட்களில் டிராகோடோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவன் தனது வாய் மூலமாகத்தான் சுவாசித்தான். இதனால் சாப்பிடும் போது அவனுக்கு பிரச்னை ஏற்பட்டது. டிராகோடோமி சிகிச்சையால் அவன் பேசும் திறனை இழந்தான். சைகை மூலமாகத்தான் அவன் எதையும் கேட்பான். அவனுக்கு பிடித்த குக்கியை கேட்பதுதான் மிகவும் அழகாக இருக்கும். தினமும் காலையில் ஒரு குக்கியைக் கேட்டு வாங்கிக் கொள்வான் என்றும் அவனது தந்தை பதிவு செய்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com