பிரிட்டன் பொதுத் தேர்தல் முடிவுகள்: ஆளும் கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை

பிரிட்டனில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை

லண்டன்: பிரிட்டனில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, பிரதமர் தெரசா மே-யின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

தேர்தலில் பிரதமர் தெரசா மே (60) தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்ஃபைன் (69) தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 650 எம்.பி.க்களைத் தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 4.69 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 15 லட்சம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) ஒரு கட்சி பெரும்பான்மையைப் பெற 326 உறுப்பினர்கள் தேவை. பிரிட்டன் நேரப்படி வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 2.30 மணி) வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

அதன் பிறகு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த லேபர் கட்சிக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதில் தற்போது வரை 597 இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 288 இடங்களைக் கன்சர்வேடிவ் கட்சி கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. ஜெர்மி கார்ஃபைன் தொழிலாளர் கட்சி 245 இடங்களையும், ஸ்காட்லாந்து தேசிய கட்சி 33, லிபரல் டெமாகரட் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com