அதிவேக 'சூப்பர் கம்ப்யூட்டர்'கள்: சீனாவுக்கு மீண்டும் முதலிடம்

உலகின் அதிவேகத் திறனுள்ள 'சூப்பர் கம்ப்யூட்டர்' பட்டியலில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக சீனாவின் கணினிகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

உலகின் அதிவேகத் திறனுள்ள 'சூப்பர் கம்ப்யூட்டர்' பட்டியலில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக சீனாவின் கணினிகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
சன்வே தாய்ஹுலைட் மற்றும் தியான்ஹே-2 என்ற அந்தக் கணினிகள், சீனாவின் தேசிய இணைவரிசைக் கணினிப் பொறியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டவை.
நொடிக்கு 9300 கோடி கோடி கணக்கீடுகளை செய்யக் கூடிய சன்வே தாய்ஹுலைட் அதிவேகக் கணினியின் தரவுச் செயலிகள் (புராஸஸர்கள்) அனைத்தும் முழுக்க முழுக்க சீனாவில் வடிவமைக்கப்பட்டு, அந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். அந்தக் கணினியுடன், ஏற்கெனவே பல முறை முதலிடத்தைப் பிடித்துள்ள தியான்ஹே-2 கணியும் உலகின் அதிவேக 500 கணினிகளின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் வெளியிடப்பட்ட உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரிசையிலும் சன்வே தாய்ஹுலைட் முதலிடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முதல் 500 அதிவேகக் கணினிகள் பட்டியல், உலகம் முழுவதிலும் உள்ள அதிவேகக் கணினிகளின் திறன் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நிபுணர்களால் மிகத் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு இரு முறை வெளியிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com