சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தேர்தல்: தல்வீர் பண்டாரியை மீண்டும் தேர்வு செய்தது இந்தியா

சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிட தற்போதைய நீதிபதி தல்வீர் பண்டாரியை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தேர்தல்: தல்வீர் பண்டாரியை மீண்டும் தேர்வு செய்தது இந்தியா

சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிட தற்போதைய நீதிபதி தல்வீர் பண்டாரியை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது.
ஐ.நா.வின் அங்கமான சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பில் 9 ஆண்டு பதவிக்காலத்தைக் கொண்ட 15 நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நீதிபதிகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், பொதுச் சபையும் தனித்தனியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கின்றன. சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் தேர்வு செய்யப்படுவதற்கு மேற்கண்ட இரு அமைப்புகளிலும் அதிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்க
வேண்டும்.
சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவராக இந்தியாவைச் சேர்த தல்வீர் பண்டாரி கடந்த 2012 ஏப்ரல் மாதம் நடைபேற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2018)
பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
இதனிடையே, சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் நீதிபதிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு அடுத்த மாதம் (ஜூலை 3) கடைசி நாளாகும்.
இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு நீதிபதி தல்வீர் பண்டாரியை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் சார்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் தல்வீர் பண்டாரி, தனது பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். கடல்சார் தகராறுகள், அண்டார்க்டிகா கண்டத்தில் திமிங்கலங்களை வேட்டையாடுவது, இனப் படுகொலைக் குற்றம், அணு ஆயுதங்களை ஒழிப்பது, பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கப்படுவது உள்ளிட்ட 11 வழக்குகளில் அவர் தனிக் கருத்துகளை வழங்கியுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தில் பணியில் இணைவதற்கு முன், இந்தியாவில் உயர்நிலை நீதித்துறையில் பண்டாரி 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ளார். அவர் உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com