'பிரெக்ஸிட்' பேச்சுவார்த்தையை தொடங்கியது பிரிட்டன்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் 'பிரெக்ஸிட்' நடவடிக்கைக்கான அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை முறைப்படி தொடங்கியது.
பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக்கு முன்னர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை உரையாடும் பிரிடடனின் 'பிரெக்ஸிட்' விவகாரங்களுக்கான அமைச்சர் டேவிட் டேவிஸ் மற்றும் பிரான்ஸ் சார்பிலான பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர்

27 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து விலக (பிரெக்ஸிட்), பிரிட்டனின் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார்.
இந்த நிலையில், பிரெக்ஸிட் தொடர்பான பேச்சுவார்த்தையை பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் முறைப்படி திங்கள்கிழமை தொடங்கின. ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறும் நாடுகள், பிற உறுப்பு நாடுகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று லிஸ்பன் ஒப்பந்தத்தின் 50-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலான பேச்சுவார்த்தையே தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியனின் பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் மைக்கேல் பார்னியர் கூறுகையில், 'ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முறைப்படி வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தையை நாங்கள் தொடங்கியுள்ளோம்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com