ஆஸ்திரேலியாவுக்கு எம்.பியானாலும், குழந்தைக்கு அம்மாதான்: தாய்ப்பால் கொடுத்து கொண்டே மசோதா தாக்கல் செய்த எம்.பி! 

ஆஸ்திரேலியா நாட்டு பெண் எம்.பி ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த விஷயம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எம்.பியானாலும், குழந்தைக்கு அம்மாதான்: தாய்ப்பால் கொடுத்து கொண்டே மசோதா தாக்கல் செய்த எம்.பி! 

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா நாட்டு பெண் எம்.பி ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த விஷயம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டு பாராளுமன்ற மேலவை உறுப்பினர் லாரிசா வாட்டர்ஸ். தற்பொழுது ஆஸ்திரேலிய பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற அவர் தன்னுடைய 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்ஸுடன் சென்றிருந்தார்.

குழைந்தைக்கு அவர் பாலூட்டிக் கொண்டிருந்த பொழுது சபாநாயகர் வாட்டர்ஸை மசோதா ஒன்றினை தாக்கல் செய்து பேச அழைத்துள்ளார். உடனே சிறிதும் தயக்கம் காட்டாமல் எழுந்த வாட்டர்ஸ், குழந்தைக்கு பாலூட்டியவாரே தீர்மானத்தினை தாக்கல் செய்து, அதை நிறைவேற்றவும் செய்துள்ளார்.

பொதுவாக பெண்கள் குழந்தைகளுக்கு பொது இடத்தில் வைத்து பாலூட்டுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் பொது இடமாக இருந்தால் என்ன? யாரோ ஒருவர், அவர் மனதினில் எண்ணுவதற்காக நமது பிள்ளைக்கு பால் கொடுப்பதை நாம் தவிர்க்க வேண்டுமா என்பது வாட்டர்ஸி ன் செய்கை நமக்கு எழுப்பும் கேள்வியாக உள்ளது.

கடந்த வருடம்தான் பெண் உறுப்பினர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என்று ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை வாட்டர்ஸ் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com