அதிபர் மடுரோவுக்கு எதிரான போராட்டம்: வெனிசூலா வன்முறை: பலி 75-ஆக அதிகரிப்பு

வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ அரசுக்கு எதிரான போராட்டத்தில் 22 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்தது.
வெனிசூலா தலைநகர் கராகஸில் உள்ள போர் விமான தளத்துக்கு வெளியே  வன்முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர்ப்புகை குண்டு வீசிக் கலைக்கும்  காவல் துறையினர்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ பதவி விலகவும், நாடாளுமன்றத்துக்குப் புதிய தேர்தல் நடத்தக் கோரியும் பல்வேறு தரப்பினர் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தலைநகர் காரகாஸ் அருகேயுள்ள அல்தமிரா பகுதியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 22 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, வெனிசூலா அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபட்ட அந்த இளைஞரை வெனிசூலா அரசின் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் ஈவு இரக்கமி ன்றி சுட்டுக் கொன்றதாக எதிர்க்கட்சி தலைவர் ஜோஸ் மேனுவல் ஓலிவரெஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com