இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு

இந்தியாவில் தொழில் தொடங்க முன்வருமாறு அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வாஷிங்டனில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்த பிரதமர் மோடி.
வாஷிங்டனில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்த பிரதமர் மோடி.

இந்தியாவில் தொழில் தொடங்க முன்வருமாறு அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அரசு முறைச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அந்நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ளா, அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிசோஸ், சிஸ்கோ நிறுவனத்தின் ஜான் சேம்பர்ஸ், மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் அஜய் பங்கா உள்பட 20 தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் நன்மையளிக்கும் பொருளாதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் பெருமளவில் அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கும் நன்மை, இந்தியாவுக்கும் நன்மை என்ற அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.
மேலும், இப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அன்னிய நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. எனவே, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் புதிய தொழில்களைத் தொடங்குவதுடன், ஏற்கெனவே உள்ள தொழில்களில் கூடுதல் முதலீடு செய்து விரிவுபடுத்தவும் வேண்டும்.
தொழில் தொடங்குவதில் அரசின் தலையீட்டைக் குறைத்து, நிர்வாகத் திறனுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது, உலகமே இந்தியாவை உற்று நோக்கும் நிலை உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை மோடியிடம் தெரிவித்தனர். அதனை மோடி கவனமாகக் கேட்டுக் கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய-அமெரிக்க வர்த்தகம் 3 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com