ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் குண்டு வீச்சு: 200 பொதுமக்கள் பலியான பரிதாபம்!

ஈராக்கின் மொசூல் நகரில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய குண்டு வீச்சில் பொதுமக்கள் 200 பேர் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் குண்டு வீச்சு: 200 பொதுமக்கள் பலியான பரிதாபம்!

மொசூல்: ஈராக்கின் மொசூல் நகரில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய குண்டு வீச்சில் பொதுமக்கள் 200 பேர் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளில் அமெரிக்க ராணுவம்  தீவிரமாக உள்ளது. இதற்கு அமெரிக்க கூட்டுப்படைகளும்  ஆதரவளித்து வருகின்றனர்.

கடந்த 17-ந்தேதி ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து மேற்கு மொசூல் அருகே உள்ள அகவாத் ஜகிதா என்ற இடத்தில் அமெரிக்கா போர்  விமானங்கள் குண்டுமழை பொழிந்தது. ஆனால் பயங்கரவாதிகளுக்கு பதிலாக அதிகள் அளவில் அப்பாவி பொதுமக்கள் இந்த தாக்குதலில் பலியாகினர்.

இந்த தாக்குதலின் காரணமாக அங்கிருந்த நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அந்த இடிபாடுகளில் இருந்து பிணங்கள் குவியல் குவியலாக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றில்  பெரும்பாலானவை பெண்கள் மற்றும் குழந்தைகலின் சடலங்கள் ஆகும்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் சடலங்கள் கூட அதிலிருந்து மீட்கப்பட்டுள்ளது நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. மொத்தம் 200 பிணங்களுக்கு மேலாக மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com