ரஷிய அதிபர் புதினுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்துக் கை குலுக்கும் ஈரான் அதிபர் ரெளஹானி.
மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்துக் கை குலுக்கும் ஈரான் அதிபர் ரெளஹானி.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
ரெளஹானி ரஷிய பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. பயங்கரவாதம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்த சந்திப்பின்போது, ரஷியா-ஈரான் இடையே பல பொருளாதார உடன்படிக்கைகள் கையெழுத்தாக உள்ளன. இருபது அணு உலைகளை அமைக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. அதில் 9 அணு உலைகளை ரஷியா அமைக்கவுள்ளது. ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களை ரஷியா வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நெருங்கிய நட்பு நாடுகளான ரஷியா, ஈரான் தலைவர்களின் சந்திப்பு, அந்நாட்டு அரசியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com