'வான்னாக்ரை'யைத் தொடர்ந்து, உலகமெங்கும் கம்ப்யூட்டர்களை அச்சுறுத்த வந்தாச்சு அடுத்த வைரஸ்!

இவ்வார துவக்கத்தில் உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களை தாக்கிய 'வான்னாக்ரை' ரான்சம்வேர் வைரஸைத் தொடர்ந்து, ,,,
'வான்னாக்ரை'யைத் தொடர்ந்து, உலகமெங்கும் கம்ப்யூட்டர்களை அச்சுறுத்த வந்தாச்சு அடுத்த வைரஸ்!

பீஜிங்: இவ்வார துவக்கத்தில் உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களை தாக்கிய 'வான்னாக்ரை' ரான்சம்வேர் வைரஸைத் தொடர்ந்து, மீண்டும் அதே போல ஒரு இணைய தாக்குதலை நிகழ்த்த மற்றொரு வைரஸ் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டர்களில் உள்ள கோப்புகளை தாக்கி மறைத்து, அவர்கள் பணம் தரும் வரை கம்ப்யூட்டர்களின் செயல்பாடுகளை முடக்குவது ரான்சம்வேர் என்னும் வைரஸ். அந்த வகையிலான 'வான்னாக்ரை' என்னும் வைரஸானது இந்த வார துவக்கத்தில் உலகமெங்கும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன.

இந்த தாக்குதலிலிருந்தே இன்னும் முழுமையாக மீளாத நிலையில், 'வான்னாக்ரை' போன்ற குணங்களை உடைய 'உய்விஸ்' (UIWIX ) என்னும் மற்றொரு புதிய வைரஸ் உலகமெங்கும் உள்ள கணினிகளை தாக்கும் அபாயம் இருப்பதாக, சீனாவின் 'தேசிய கணினி வைரஸ் அவசர நிலை செயல்திட்ட மையம்' தெரிவித்துள்ளது. 

'வான்னாக்ரை' போலவே இதுவும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள குறைகளை பயன்படுத்தியே கணினிக்குள் ஊடுருவுகிறது. வைரஸால் தாக்கப்பட்ட கோப்புகளை .உய்விஸ்' (.UIWIX) என்னும் எக்ஸ்டென்ஷன் கொண்டதாக இது மாற்றி விடும். ஆனால் இது வரை எந்த விதமான தாக்குதலும் கண்டறியப்படவில்லை. இருந்தபோதிலும் அவசரநிலை செயல்திட்ட மையமானது உஷார் நிலையில் உள்ளது என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதே நேரத்தில் இது போன்ற வைரஸ் தாக்குதல்களிலிருந்து தங்களது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் கணினிகளை காப்பாற்ற, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதி ஒன்றினை மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com