ஆப்கன்: சாலையோர குண்டுவெடிப்பில் 11 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட சாலையோர குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட சாலையோர குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
லோகர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை சாலையோர குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஐந்து பெண்கள், ஐந்து சிறுவர்களும் அடங்குவர்.
சாலையோர குண்டு வெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்தும் சாலையோர குண்டு வெடிப்புகளில் சிக்கி மாதத்துக்கு 140 பேர் வரை பலியாகின்றனர்.
நங்கர்ஹார் மாகாணம் கனிகில் மாவட்ட உள்ள சோதனைச் சாவடியில் புதன்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த தனது சகாக்கள் மீது போலீஸ்காரர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார். இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். பின்னர், அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பியோடினார். இந்த நிலையில், சிலமணி நேர இடைவெளியில் இந்த சாலையோர குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
அமெரிக்க படையினரைக் குறிவைத்து பர்வான் மாகாணத்தில் மற்றொரு சாலையோர வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com